Tuesday, March 28, 2023
IPL 2023 Schedule, Start Date, Time table, Match List, Venues
74 games will be played across 12 cities, with the final match to be played on 28 May. 70 of those matches will be league games, top four teams will eligible for the IPL knockout stage.
Tuesday, July 29, 2014
Friday, April 18, 2014
தெனாலிராமன் - திரை விமர்சனம் / thenali raman movie review
அதாகப்பட்டது... :
மூன்று ஆண்டு வனவாசத்திற்குப் பிறகு, வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் இன்று
வெளியாகியிருக்கும் படம் தெனாலிராமன். ஏற்கனவே ட்ரெய்லரும், பாடல்களும் நம்
மனதைக் கவர்ந்துவிட்டன. படமும் நம் எதிர்பார்ப்பை ஈடு செய்ததா என்று
பார்ப்போமா!!
ஒரு ஊர்ல..:
மன்னராக ஒரு வடிவேலு. அவரது நவரத்தின அமைச்சர்களான ஒன்பது பேரும் வில்லன்
ராதாரவியுடன் இணைந்துகொண்டு, நாட்டையே குட்டிச்சுவராக்குகிறார்கள். இது
ஏதும் அறியாத மன்னன் அந்தப்புரத்தில் மனைவிகளோட லயித்து இருக்கும்போது,
தெனாலிராமனான இன்னொரு வடிவேலு மந்திரியாக வருகிறார். பிறகு அவர் எப்படி
மன்னனைத் திருத்தி மந்திரிகளிடம் இருந்து காத்து, இளவரசியை லபக்குகிறார்
என்பதே கதை.
உரிச்சா....:
ஒன்பது மந்திரிகளும் சீன அரசிடம் நமது நாட்டை வியாபாரத்துக்கு திறந்துவிட
ஒப்புக்கொள்வதுடன் படம் ஆரம்பிக்கிறது. மன்னர் ஒரு மக்கு என்பதையும்
நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அப்பாவியான மன்னர் நாடு நலமாக இருப்பதாக
மந்திரிகள் சொல்வதை நம்பிக்கொண்டு அந்தப்புரத்தில் 36 மனைவிகளுடன் ஜாலியாக
இருக்கிறார். சீனப்பயணத்தில் ஒரு நல்ல மந்திரி சீன வில்லனால் கொல்லப்பட,
அந்த பதவிக்கு யாரைப் போடுவது என போட்டி நடக்கிறது. தெனாலிராமன் ஜெயித்து
மந்திரியாக உள்ளே நுழைகிறார். அவரை ஜெயிக்க விடாமல் தடுக்க, மந்திரிகள்
போராடுவதும் வடிவேலு அதையும் மீறி ஜெயிப்பதும் கலகலப்பான காட்சிகள்.
தொடர்ந்து தெனாலிராமனின் புத்திசாலித்தனத்தில் மன்னரும் இளவரசியும்
மயங்குகிறார்கள். மன்னர் ஏதாவது டெஸ்ட் வைப்பதும் தெனாலிராமன் ஜெயிப்பதுமாக
கலகலப்பூட்டும் காட்சிகளுக்கு இடையே, மன்னரைத் திருத்தும் வேலைகளும்
நடக்கின்றன. ஆனாலும் மந்திரிகள் தெனாலிராமன் மேல் பழி சுமத்தி, அரண்மனையை
விட்டே விரட்டுகிறார்கள். மீண்டும் மன்னரும் தெனாலிராமனும் இணைந்தார்களா,
மன்னர் திருந்தினாரா என்பதை சுவையாக ஆனால் ஸ்லோவாகச் சொல்லி
இருக்கிறார்கள்.
தெனாலிராமன் கதைகளை ஏற்கனவே படித்தவர்களுக்கு வடிவேலு எப்படி சமாளிப்பார்
என்பதை எளிதாக யூகிக்க முடியும் என்பது தான் படத்தின் பலவீனம். ஆனாலும்
வடிவேலு தனது மேனரிசத்தாலும் டயலாக் டெலிவரியாலும் சமாளிக்கிறார். புலிகேசி
பாணியில் மக்களைக் கவனிக்காத மன்னர் + போராளி கான்செப்ட்டையே தெனாலிராமன்
எனும் தேன் தடவி சொல்லியிருக்கிறார்கள். புலிகேசி அளவிற்கு சிரிக்க
வைக்கும் காட்சிகள் அதிகம் இல்லை.(இருக்கின்றன, ஆனாலும் அந்த அளவிற்கு
சிரிப்பு வரவில்லை). இந்திரலோகத்தில் அழகப்பன் அளவிற்கு மோசம் இல்லை,
புலிகேசி அளவிற்கு டாப்பும் இல்லை.
கதை கொஞ்சம் சீரியஸ் ஆனாலே ஃப்ளாஷ்பேக் போட்டு, மன்னர்-தெனாலி விளையாட்டுக்குப் போய் நம்மை ரிலாக்ஸ் பண்ணிவிடுகிறார்கள். நல்ல உத்தி.
வடிவேலு:
பொதுவாகவே நடிகர்கள் கொஞ்சம் கேப் விட்டு நடிக்க வந்தால், பழைய ஈர்ப்பு
போய்விடும். ஆனால் இதில் வடிவேலு அப்படியே திரும்பி வந்திருக்கிறார்.
மன்னராகவும் தெனாலிராமனாகவும் நடிப்பு+நகைச்சுவையில் நன்றாகவே வித்தியாசம்
காட்டி கலக்குகிறார். ஹீரோயினுக்கு அப்பாவாகவும் ஜோடியாகவும் நடிக்க அதிக
துணிச்சல் வேண்டும்! தோற்றத்தில் பெரிய வித்தியாசம் இல்லாவிட்டாலும்,
மேனரிசங்களால் சமாளித்துவிடுகிறார். இரு கேரக்டர்களில், குழந்தைகளுடன்
ஒளிந்து விளையாடுகின்ற, ஒவ்வொரு முறையும் வெவ்வேறு மனைவியுடன் வரும் மன்னரே
நம்மை அதிகம் கவர்கிறார்.
சொந்தபந்தங்கள்:
மந்திரிகளில் மனோபாலா தான் டாப். வழக்கம்போல் அதிராமல் பேசி சிரிக்க
வைக்கிறார். காமெடி வில்லன்களாகவே ஒன்பது பேரும் வருகிறார்கள். குறுநில
மன்னராக வரும் ராதாரவி பொருத்தமான தேர்வு. இவரை விட்டால் நாசர் தான்.
தேவதர்ஷிணி நல்ல நகைச்சுவை நடிகையாக் ஃபார்ம் ஆகிவிட்டார். டயலாக் டெலிவரி
அட்டகாசம். ஹீரோயினின் அம்மாவாக ஒரு காட்சியில் வரும் அந்த ஆண்ட்டி, செம
எக்ஸ்பிரசன்.
டெக்னிக்கல் டீம்:
வடிவேலு புறாவை பறக்கவிட்டு நடந்துவரும் ஒரு ஷாட் இருக்கிறது
பாருங்கள்..பின்னிவிட்டார்கள். ஒரு மாஸ் ஹீரோவுக்கு ஓப்பனிங் சீனாக
வைக்கலாம். அவ்வளவு அழகு அந்த ஷாட். (படத்தில் இடையில் வருகிறது.) ராம்நாத்
ஷெட்டியின் ஒளிப்பதிவு அருமையிலும் அருமை. தியேட்டரில் வசனங்கள் அற்ற அந்த
ஒரு நிமிட ஷாட்டுக்கு கைதட்டல் கிடைத்தது. படத்தில் கலர்ஃபுல்லான ஆர்ட்
டைரக்சன். புலிகேசி போல் இல்லாமல் இதில் அரண்மனையை வண்ணமயமாக
உருவாக்கியிருக்கிறார்கள். பார்க்க நன்றாக இருக்கிறது.
நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- ஸ்லோவான முதல்பாதி
- பழகிய தெனாலிராமன் ஜோக்ஸ், வேறு நகைச்சுவை பெரிதாக இல்லாதது
- ஆரம்பம் முதல் இறுதிவரை யூகிக்க வைக்கும் திரைக்கதை. பெரிய ட்விஸ்ட் எதுவும் இல்லாமல் இருப்பது ஒரு குறை.
பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- வடிவேலு...வடிவேலு..வடிவேலு
- ஆரூர்தாஸின் அற்புதமான வசனங்கள்
- மன்னருக்கும் தெனாலிராமனுக்கும் உருவாகும் நட்பை அழகாக திரையில் கொண்டு வந்தது
- மன்னரின் குழந்தைத்தனத்தை ரசிக்கும்படி சொன்னது
- எதிர்பாராமல் வந்து விழும் ‘நார்மல்’ தமிழ் நகைச்சுவை வசனங்கள்.
- ஃபைட் சீன் இல்லாமல் படத்தை எடுத்தது
- இமானின் பாடல்கள். ‘ஆணழகு’ பாடலும் நெஞ்சே பாடலும் கேட்கவும் பார்க்கவும் நன்றாக இருக்கின்றன.
Under Creative Commons License: Attribution Non-Commercial No Derivatives
Friday, April 11, 2014
நான் சிகப்பு மனிதன் - திரை விமர்சனம் / Naan Sigappu Manithan Review
அதாகப்பட்டது... :
சமர் படத்திற்குப் பிறகு இயக்குநர் திருவின் இயக்கத்திலும், பாண்டிய நாடு
வெற்றிக்குப் பின் விஷாலின் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம், நான்
சிகப்பு மனிதன். தீராத விளையாட்டுப்பிள்ளையாக இருந்த விஷால் திருந்தி,
பாண்டியநாட்டில் வெற்றிக்கொடி நாட்டியபின் வரும் படம் என்பதாலும், லிப் டூ
லிப் கிஸ் இருக்கிறது என்பதாலும் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு. எப்படி
இருந்தது கிஸ்..ச்சே..படம் என்று பார்ப்போம், வாருங்கள்.
ஒரு ஊர்ல..:
’நார்கொலாப்ஸி’ எனும் நோயினால் அவதிப்படும் மனிதர் விஷால். அப்படீன்னா
என்னன்னா, ஏதாவது அதிர்ச்சியான செய்தியை/சத்தத்தை கேட்டாலோ, ஷகீலா படம்
பார்த்தாலோ, உணர்ச்சிவசப்பட்டாலோ(ரெண்டும் ஒன்னுதாங்கிறீங்களா?..!)
பொசுக்குன்னு தூங்கிடுவார் மனுசன். இதெல்லாம் ஒரு மேட்டரான்னு
நினைக்காதீங்க. அந்த பிரச்சினையால மேட்டர்கூட கஷ்டம்ங்கிறது தான்
சிக்கலே..இப்போப் புரியுதா, எம்மாம் பெரிய வியாதின்னு. சரி..அப்படிப்பட்ட
மனுசனையும் புரிஞ்சுக்கிட்டு, லவ் பண்ணுதாரு லட்சுமி மேனன். ஆனால் ஒரு
இக்கட்டான சூழ்நிலையில, இந்த வியாதியால லட்சுமியை விஷால் காப்பாத்த முடியாம
போயிடுது. அதனால லட்சுமி கோமா ஸ்டேஜ்க்கு போயிடுறாங்க..அதுக்குக்
காரணமானவங்களை கண்டுபிடிச்சு, இந்த நோயையும் மீறி எப்படி பழி வாங்குகிறார்
என்பது தான் கதை.
உரிச்சா....:
விஷால் நண்பர்களுடன் அலைந்து திரிந்து ஒரு துப்பாக்கி விலைக்கு வாங்குவதில்
ஆரம்பிக்கிறது படம். அடுத்து நார்கொலாப்ஸின்னா என்னன்னு விவரிச்சுட்டு,
சட்டுபுட்டுன்னு கதைக்குள்ளே நுழையறாங்க. Bucket List மாதிரி விஷாலுக்கும்
சில விஷயங்கள் வாழ்க்கையில் நடக்கணும்ன்னு ஆசை. ரோட்ல தனியாப்
போகணும்..ஒருநாள் ஃபுல்லா முழிச்சிருக்கணும்..தேவதையைப் பார்க்கணும்..லவ்
பண்ணனும்..கிஸ் பண்ணனும்..தப்பு செய்றவங்களை தட்டிக்கேட்கணும்ன்னு பத்து
விஷயங்களை லிஸ்ட் போட்டு வச்சிருக்காரு..அடடா, விட்டுட்டனே..ஷகீலா படத்தை
முதல்நாள் முதல் ஷோ பார்க்கணும் என்பதும் ஒரு ஆசை!
அந்த ஆசைகள் நிறைவேறுவதை தனியாச் சொல்லாம, அவரோட வாழ்க்கையில் நடக்கும் ஒரு
சம்பவம் அடுத்த சம்பவத்துக்கு(ஆசைக்கு) இட்டுச் செல்ற மாதிரி
காட்டியிருப்பது நல்ல திரைக்கதை உத்தி. சமர் திரைக்கதை மாதிரியே இதிலும்
முதல்பாதியில் பின்னியிருக்கார் திரு. லட்சுமியை ‘அந்த’ சூழ்நிலையில
காப்பாத்த முடியாம, அதிர்ச்சியாகி விஷால் தூங்கறது பதற வைக்குது. அப்போ
விடறாங்க இண்டர்வெல்.
இண்டர்வெல் வரைக்குமே படம் பட்டையைக் கிளப்புது. லட்சுமியை கோமாக்கு
அனுப்புன ரவுடிகளை எப்படி பழிவாங்கப்போறார்ன்னு ஆவலையும் தூண்டும்படியா,
இண்டர்வெல் ப்ளாக். ரவுடிகளில் ஒருத்தன் பேர் மட்டும் விஷாலுக்கு தெரியுது.
அதை வச்சு, அவங்களைத் தேடி அவர் அலையறாரு. அந்த ரவுடியைக்
கண்டுபிடிக்கும்போது, அவங்களை அனுப்புன வில்லன் யாருன்னு நமக்குத்
தெரியுது. அந்த வில்லன் ஏன் அப்படி விஷாலுக்குப் பண்ணான்னு ஒரு ஃப்ளாஷ்பேக்
வைக்கிறாங்க பாருங்க, அங்கே தான் படம் டொக் ஆகிடுது.
ஒரு நீளமான, கேவலமான ஃப்ளாஷ்பேக். ஒருத்தன் விஷால் மாதிரி அப்பாவிக்கு
இப்படி ஒரு காரியம் பண்ணி இருக்கான்னா, அதுக்கான காரணம் எப்படி இருக்கணும்?
(அல்லது நான் மகான் அல்ல மாதிரி காரணமே இல்லாம தப்பு பண்ணும் ரவுடிகள்ன்னு
விட்டிருக்கலாம்). ஆனால் இதில் சீன் படக்கதை மாதிரிப் போகுது அந்த
ஃப்ளாஷ்பேக். படத்துக்கு யூ/ஏ சர்ட்ட்ஃபிகேட் கிஸ்க்காக கொடுத்திருக்க
மாட்டாங்க. இந்த ஃப்ளாஷ்பேக்கிற்க்காத்தான் கொடுத்திருப்பாங்க. இனியா எனும்
நல்ல நடிகையை சென்னையில் ஒருநாளுக்கு அப்புறம் அதே கேரக்டர்ல பார்க்க
கொடுமையா இருக்கு. ஆனால் அவருக்கு நல்ல நடிப்பு.
வில்லன்.அவனுக்கு துரோகம் பண்ணும் மனைவி..பொண்டாட்டியை இன்னொருத்தன்கிட்ட
அனுப்பி காசு வாங்கும் புருசன்னு அய்யய்யோ..சகிக்கலை. இந்த மாதிரிப்
படத்தில் அந்த மாதிரியான கேரக்டர்களையோ, சீன்களையோ யாரும் எதிர்பார்க்கலை.
முதல்பாதியில் கிஸ்+ஜலக்கிரீடை இருந்தாலும் ஆபாசமாத் தெரியலை. ஆனால் அந்த
டீசண்ட்டா முன்பாதி செட் பண்ண மனநிலைக்கு நேரெதிரா சீன்கள் வரும்போது,
ரசிக்க முடியலை. சர்ப்ரைஸ் கொடுக்கணும்ன்னு டைரக்டர் நினைச்சிருக்காரு,
ஆனால் அது ‘அதிர்ச்சி’ ஆகிடுச்சு!
அந்த வில்லனோ, ஃப்ளாஷ்பேக்கோ இல்லாமலேயே (இப்போ கட் பண்ணாலும்) படம்
நல்லாத்தான் இருந்திருக்கும். இந்த நோயோட அவர் எப்படி ஜெயிக்கிறார்ன்னு கதை
சொல்ல வந்துட்டு, அவருக்கு ஏன் அப்படிப் பண்ணாங்கன்னு விளக்குறதுக்கு அதிக
நேரம் எடுத்து, ஆபாசமா விளக்கிட்டதால இரண்டாம்பாதியில் பாதி அவுட்
ஆகிடுது. அப்புறமா விஷால் பழி வாங்குறதைக் காட்டினாலும் ‘அட..போங்கப்பா’
எனும் மனநிலைக்கு நாம வந்திடறோம்.
சமர் பட திரைக்கதை டெம்ப்ளேட்டில் இதையும் சொல்லி இருக்கிறார்கள். சமர்
படத்திலும் முதல் பாதியில் வலுவான முடிச்சை திரு போட்டிருப்பார். ஆனால்
அந்த முடிச்சை அவிழ்ப்பதில் கோட்டை விட்டிருப்பார். இதிலும் அப்படியே!
விஷால்:
பஞ்ச் டயலாக், ஹீரோயிசம் இல்லாம விஷாலைப் பார்க்க நல்லா இருக்கு. இதே
ரூட்டில் போறது அவருக்கும் நமக்கும் நல்லது. நார்கொலாப்ஸி நோயால்
பாதிக்கப்பட்டவரா தத்ரூபமா நடிச்சிருக்கார். தூங்கறதுல என்னய்யா
தத்ரூபம்ங்கிறீங்களா? அதைச் சொல்லலை..அந்த நோயால் வேலை கிடைக்காமல் ஃபீல்
பண்றது, லட்சுமி மேனனை லவ் பண்ணும் சீன்ஸ், லட்சுமியுடன் வரும் அந்த
பாத்ரூம் சீன்(நல்ல சீன் தான்.)..என பல காட்சிகளில் நடிப்பில் கலக்கி
இருக்கிறார். ஒரு நடிகரா ஜெயிச்சிட்டார், விஷால்.
லட்சுமி மேனன்:
நடிக்கத் தெரிந்த சில நடிகைகளில் ஒருவர். இதில் சிட்டி பொண்ணா வர்றார்.
இண்டவ்ர்ல்ல கோமாக்கு போயிடறதால, இரண்டாம்பாதியில் நடிக்க ஸ்கோப் இல்லை.
ஆனால் முதல் பாதியில் சின்ன சின்ன எக்ஸ்பிரசன்ஸில்கூட அசத்துகிறார். அந்த
கண்களே, அவர் நினைப்பதைச் சொல்லிவிடுகின்றன. அட்டகாசம்! பெண்ணே..பெண்ணே
பாடல் காட்சியில் அவர் ரொமாண்டிக்காக ஆடுவதைத் தான் பார்க்க முடியவில்லை.
‘கதைக்குத் தேவைப்பட்டதால முத்தம் கொடுத்தேன்’ன்னு சொன்னார். அது உண்மை
தான்!
சுந்தர்:
யார் இவரு? இவருக்கெல்லாம் எப்படி சான்ஸ் தர்றாங்கன்னு தெரியலை. மூணு
படத்தில் தனுஷ் நண்பனா வந்தவர். மயக்கம் என்ன, மூணு, கதிர்வேலன் காதலின்னு
இவரோட அற்புதமான நடிப்பால் ஊத்தி மூடுன படங்கள் ஏற்கனவே பல உண்டு. அப்படி
இருக்கும்போது, மெயின் வில்லன் கேரக்டருக்கு..அதிலும் நடிக்க நல்ல ஸ்கோப்
உள்ள அந்த கேரக்டருக்கு இவரை எப்படிப் போட்டார்கள் என்று
தெரியவில்லை..முடியலை. அவரோட ‘வெற்றி’ப்பட வரிசையில் இதையும் சேர்த்த
பெருமை அவருக்கே!
டெக்னிக்கல் டீம்:
படம் முழுக்க நம்மை அசத்துவது ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவும், ரூபனின்
எடிட்டிங்கும். த்ரில்லர் எஃபக்ட்டைக் கொடுப்பதில் இருவரும் போட்டி போட்டு
உழைத்திருக்கிறார்கள். ஜீ.வி. பிரகாஷ் இசையில் பெண்ணே பாடல்
ஓகே..வசனங்களில் நல்ல ஷார்ப்னெஸ் தெரிகிறது.
நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- அலைபாயும் இரண்டாம்பாதி
- வில்லனின் ஃப்ளாஷ்பேக்..(ஃபேமிலி ஆடியன்ஸைக் கவராது)
- சூப்பர் வில்லன் சுந்தர்
பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- விறுவிறுப்பான முதல்பாதி திரைக்கதை
- வசனம்
- விஷால் & லட்சுமி மேனனின் மெச்சூரிடீயான நடிப்பு + கெமிஸ்ட்ரி.
- அவ்வப்போது ரிலாக்ஸ் செய்யும் ஜெகனின் காமெடி டயலாக்ஸ்
- இனியாவின் நடிப்பு
பார்க்கலாமா? :
முதல்பாதிக்காக..........................பார்க்கலாம்!
Under Creative Commons License: Attribution Non-Commercial No Derivatives
Saturday, April 05, 2014
ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்/ oru kanniyum moonu kalavanigal Movie Review
நிமிடத்திற்கு நிமிடம் மனிதனின் விதி மாறும் என்ற கருத்தை வலியுறுத்தி வெளி வந்திருக்கும் படம் தான் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்.
நாயகன் அருள்நிதியின் காதலியான அர்ஷிதா ஷெட்டிக்கு வேறொருவருடன் திருமண நிச்சயிக்கப்பட்டு, சர்ச்சில் திருமணமும் நடக்க இருக்கிறது. அர்ஷிதாவின் அப்பா மிகப்பெரிய தொழிலதிபர். அவருடைய தொழில் எதிரியான நாசர் அவரை அவமானப்படுத்துவதற்காக அருள்நிதியை கடத்தி வந்து அவர் காதலிக்கும் பெண்ணான அர்ஷிதாவை கூட்டிக்கொண்டு ஓடச்சொல்கிறார். அப்படி சென்றால் அவருக்கு ரூ.30 லட்சம் தருவதாகவும் கூறுகிறார்.
ஒரு புறம் அருள்நிதியின் அம்மாவுக்கு ஆபரேஷன் செய்ய பணம் தேவைப்படுகிறது. அதேநேரத்தில் தனது காதலியையும் கரம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த டீலுக்கு அருள்நிதி ஒப்புக்கொள்கிறார். அருள்நிதியுடன் அவரின் நண்பர்களான பிந்து மாதவியும், பகவதி பெருமாளும் சேர்ந்து கொள்கிறார்கள். இவர்களுக்கும் பணத்தேவை இருப்பதால் அருள்நிதியுடன் சேர்ந்து இந்த கடத்தலை நடத்த முடிவெடுக்கின்றனர்.
அதன்படி, அர்ஷிதாவின் கல்யாணம் நடக்கும் சர்ச்சுக்கு சென்று துப்பாக்கி முனையில் அவளை கடத்த திட்டம் தீட்டுகின்றனர். அதற்கான துப்பாக்கியை அருள்நிதியின் மற்றொரு நண்பரான கார்த்திக் சபேஸ் ஏற்பாடு செய்துகொடுக்கிறார். இரண்டு துப்பாக்கி தேவைப்படும் நிலையில் ஒரு துப்பாக்கியை மட்டுமே ஏற்பாடு செய்து கொடுக்கிறார். மற்றொன்றை வாங்க கிளம்பும் வேளையில் மின்விசிறி தலையில் விழுந்து மயக்கமடைகிறார் சபேஸ். அதனால் கடத்தலுக்கு அவரை உபயோகப்படுத்தாமல் வீட்டிலேயே விட்டுவிட்டு செல்கின்றனர்.
சரியாக 9.00 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பும் அவர்கள் அடுத்தடுத்து ஏற்படும் பிரச்சினைகளை எப்படி சமாளித்து இறுதியில் அர்ஷிதாவை கடத்தினார்கள் என்பதே படத்தின் கதை. இந்த கதையை மூன்று விதமாக இயக்குனர் சொல்லியிருக்கிறார். அதாவது, 9.00 மணிக்கு அவர்கள் வீட்டை கிளம்பியதால் என்ன நடந்தது? அதேபோல் 1 நிமிடம் முன்னதாக 8.59 மணிக்கு கிளம்பினால் என்ன நடந்தது? 1 நிமிடம் தாமதமாக 9.01 மணிக்கு கிளம்பியதால் என்ன நடந்தது? என மூன்று விதங்களில் அழகாக படமாக்கியிருக்கிறார்.
நாயகன் அருள்நிதி முகத்தில் சோகம், அழுகை, காதல் என எந்த உணர்வுகளையும் காட்டமுடியாமல் தவிக்கிறார். அதேபோல் பிந்துமாதவியும் முகத்தில் நடிப்பை வரவழைக்க திணறியிருக்கிறார். பகவதி பெருமாள் தான் இருவருடைய தொய்வையும் கொஞ்சம் தூக்கி நிறுத்துகிறார். அர்ஷிதா ஷெட்டி உதயம் படத்தில் பார்த்த அதே பளபளப்பு. சிறு சிறு காட்சிகளே இவருக்கு இருந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார்.
ஹிப்பி லகரி என்ற வித்தியாசமான பெயரில் வரும் நாசருக்கு ஒரே இடத்தில் தான் காட்சியை வைத்திருக்கிறார்கள். ஆனாலும் தன்னுடைய அனுபவ நடிப்பை அவர் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். போலீஸ்காரராக வரும் ‘ஆடுகளம்’ நரேன். டீக்கடை நாயராக வரும் மனோபாலா, துணி சலவை செய்பவராக வரும் சிசர் மனோகர், காய்கறி விற்பவராக வரும் பாண்டு ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இந்த கதை ஏற்கெனவே தமிழ் சினிமாவில் வந்திருந்தாலும், அதை வேறு கோணத்தில் சிந்தித்து படத்தை எடுத்த இயக்குனர் சிம்புதேவனுக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்திலும் அவனது விதி மாறுகிறது என்ற வலிமையான கருத்தை சொல்லும் விதத்தில் காமெடியை புகுத்தி ரசிக்கவும் வைத்திருக்கிறார். நடிகர்கள் தேர்வில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
நடராஜன் சங்கரன் இசையில் பிரேம்ஜி, கானா பாலா பாடிய அறிமுக பாடல் அருமையாக இருக்கிறது. மற்றபடி படத்தில் ஒரே ஒரு பாடல் தான் இடம்பெற்றுள்ளது. பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது. எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில் சர்ச் காட்சிகள் அழகாக இருக்கிறது. அதேபோல், சேசிங் காட்சிகளிலும் இவரது கேமரா பளிச்சிடுகிறது.
மொத்தத்தில் ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ தப்பிவிடுவார்கள்.
Source:
http://www.maalaimalar.com/2014/04/04182350/oru-kanniyum-moonu-kalavanigal.html

Pepsi IPL7 2014 Schedule
Pepsi IPL7 2014 Schedule
The Schedule for the Pepsi IPL7 2014 is out. The Pepsi IPL7 2014 will Start From 16th April, 2014 to 1st June, 2014.
Pepsi IPL7 2014 Schedule Start Match in UAE from 16th April to 30th April, 2014 and ends on 1st June,2014 in Mumbai India

Friday, April 04, 2014
Subscribe to:
Posts (Atom)